அரபிக்குத்து பாடலுக்கு செம கிளாமராக குத்தாட்டம் போட்ட யாஷிகா! சூடேறிய இளசுகள்! வைரல் வீடியோ!!Yashika dance to arapikuthu song video viral

தளபதி விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். 

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் அண்மையில் வெளியாகி இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி  இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் செம ட்ரெண்டாகி வரும் இந்த அரபிக் குத்து பாடலுக்கு பல பிரபலங்களும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை யாஷிகாவும் அந்த பாடலுக்கு குட்டையான உடையில் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குட்டையான உடையில் அவர் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.