சினிமா

என் அப்பா, அம்மா ஆசையை நிறைவேத்திட்டேன்! செம ஹேப்பியில் யாஷிகா! என்ன விஷயம் தெரியுமா??

Summary:

என் அப்பா, அம்மா ஆசையை நிறைவேத்திட்டேன்! செம ஹேப்பியில் யாஷிகா! என்ன விஷயம் தெரியுமா??

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவர் 
கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா 3 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சாவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'சொந்தமாக வீடு வாங்கி, என் அம்மா, அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன் என என் ஒருபோதும் நினைத்து பார்த்ததே இல்லை. இந்த மகிழ்ச்சியான செய்தியை மிகவும் தாமதமாக உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு மன்னிக்கவும். கொரோனா மற்றும் நான் சந்தித்த மோசமான விபத்தின் காரணமாக இந்த வீட்டுக்குள் வரமுடியாமல் போனது. தற்போது தான் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்' என கூறியுள்ளார்.


Advertisement