கைதாக போகிறாரா யாஷிகா ஆனந்த்..? நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு..! ரசிகர்கள் கலக்கம்...yashika-anandh-arrest-for-accident

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். 2016 ஆம் வருடம் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதன்பின் துருவங்கள் பதினாறு, பாதம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவர் பெரிய அளவுக்கு புகழ் பெறவில்லை.

Yashika anadh

இதன்படி, 2018ஆம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் யாஷிகா ஆனந்திற்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின் படவாய்ப்புகள் குவிய தொடங்கின. மேலும் பல கிசுகிசுவும் யாஷிகாவை பின் தொடர்ந்தது.


பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு, சோம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி, மேதை, கடமையை செய் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yashika anadh

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீர் விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகாவின் உயிர் தோழி சம்பவ இடத்திலயே இறந்து விட்டார். இது தொடர்பாக யாஷிகா குடித்து விட்டு கார் ஓட்டிச்சென்றதாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெறும் சூழ்நிலையில் தற்போது விசாரணைக்காக உயர்நீதிமன்றம் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார். ஆஜராகவில்லை என்றால் யாஷிகா ஆனந்த் கைது செய்யபடலாம் என சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.