படுக்கைக்கு அழைத்த நபரின் விவரங்களை வெளியிட்டது ஏன்? நடிகை நேகா சக்சேனா விளக்கம்

படுக்கைக்கு அழைத்த நபரின் விவரங்களை வெளியிட்டது ஏன்? நடிகை நேகா சக்சேனா விளக்கம்


why-revealed-about-the-person-who-asked-for-a-night-sax

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான நேகா சக்சேனா தன்னை ஒரு நாள் இரவு படுக்கைக்கு அழைத்த எல்சன் என்ற நபரின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

துபாயில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் எல்சன் என்ற நபர் நடிகை நேகா சக்சேனாவின் மேனேஜரிடம் நடிகையை தன்னுடன் ஒரு நாள் இரவு தங்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த மேனேஜர் அவரை ஊடகங்களில் முன் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை நேகா சக்சேனா அந்த நபரின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை இணையத்தில் வெளியிட்டு அவரை பற்றிய முழு விவரங்களையும் சேகரிக்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

neha saxena

இதன் மூலம் அந்த நபர் வேலை பார்க்கும் அலுவலகம் வரை சென்று நடிகையின் ஆதரவாளர்கள் அவரை பற்றி விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் அந்த நபர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது குறித்து பேசிய எல்சனின் தந்தை தன்னுடைய மகனின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு விட்டது; யாரோ தன்னுடைய மகனின் மொபைலில் இருந்து தவறுதலாக மெசேஜ் அனுப்பி விட்டதாக கூறி சமாளித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை நேகா சக்சேனா "நான் ஒரு நடிகை என்பதைவிட ஒரு பெண்ணாக என்னுடைய சுயமரியாதைக்காக போராடியே தீரவேண்டும். நான் பிறப்பதற்கு முன்பே என் தந்தையை இழந்து, வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து யாருடைய உதவியும் இன்றி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஒரு பெண்ணாக இருப்பதை நான் குறையாக எண்ணவில்லை; மிகவும் பெருமையாக கருதுகிறேன். நான் தனியாய் நின்று என்னை தவறான  வலிக்கு அழைத்த அந்த நபருக்கு சரியான பாடம் புகட்டி, பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பேன்.

neha saxena

அந்த நபருடைய போன் ஹாக் செய்யப்பட்டு விட்டது என்பது முற்றிலும் பொய். அவ்வாறே செய்யப்பட்டிருந்தால் அவர் எதற்காக அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் அவருடைய தந்தை மற்றும் உறவினர்களை கொண்டு பேச வைக்க வேண்டும். அவருடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதற்காக நான் நேரம் ஒதுக்கினேன்; ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காத அவர் அவருடைய whatsapp ஹேக் செய்யப்பட்டு விட்டதாக பொய் கூறியுள்ளார். அந்த நபரும் இதற்குத் துணையாக அவருக்கு பின்னால் இருக்கும் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

பெண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பெண்கள் உங்களுக்கு விளையாட்டு பொம்மையா? திரைத்துறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் உங்களது தேவையற்ற ஆசைகளுக்கு அடிபணிவார்கள் என எண்ணுகிறீர்களா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.