தீனா படத்திற்கு பிறகு AR முருகதாஸ் அஜித்தை இயக்காததற்கு இதுதான் காரணமா?why-ar-murugadoss-not-directing-thala-ajith-movie-after

இயக்குனர் முருகதாஸ் என்றாலே அவர் இயக்கும் படம் வெற்றிதான் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலானா படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

கேப்டன் நடிப்பில் வெளியான ரமணா, விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, சூர்யா நடிப்பில் வெளியான கஜினி போன்ற படங்கள் எல்லாமே மாபெரும் சாதனை படைத்தது. இதில் முருகதாஸ் அவர்கள் தல அஜித்தை வைத்து தீனா என்ற கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். தல அஜித் மற்றும் இயக்குனர் முருகதாஸ் இருவருக்குமே இந்த படம் மிகவும் முக்கியமான படம். அஜித்திற்கு தல என்ற பெயர் தீனா படத்தில் இருந்துதான் வந்தது.

ajith ar murugadoss

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தீனா படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் ஏன் தல அஜித்தை இயக்கவில்லை என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. அதற்கு பதில் தரும் விதமாக ஒருசில காரணங்கள் சொல்லப்படுகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல் என்னும் படத்தில் நடிக்கவிருந்தார் தல அஜித், ஆனால் அப்போது ஒரு சில பிரச்சனைகளால் அந்த படம் நின்றுவிட்டது. அப்போது முருகதாஸிடம் நடிகர் அஜித், கொஞ்சம் காத்திருங்கள் நானே இப்படத்தில் நடிக்கிறேன் என கூறினாராம். ஆனால், அதை கேட்காத இயக்குனர் முருகதாஸ் சூர்யாவுடன் "கஜினி" படத்தை தொடங்கிவிட்டார், அஜித்திற்கு இது மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம். அந்த காரணத்தாலே முருகதாஸுடன் அவர் இன்று வரை பணிபுரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதான் உண்மையான காரணமா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்.

ajith ar murugadoss