நடிகை நேகாவின் அடுத்த படம் என்ன தெரியுமா?

நடிகை நேகாவின் அடுத்த படம் என்ன தெரியுமா?


What is Naga's next movie?

ஒரு மகன் தன் தாயின் தியாகம் கூட அறியாமல் இறுதி வரை வெறுக்கிறான் அவன் எவ்வளவு தான் அந்த தாயை வெறுத்தாலும் தன் மகனுக்காக இறுதி வரை வாழ்கின்ற அந்த தாய்.

இந்த இரண்டு பேருக்கும் இடையில் ஏற்படும் பாச போராட்டம் தான் இந்த படத்தின் கதையாக உருவாக்க படும்.

இந்த படத்தின் பெயர் ‘செல்லமடா நீ எனக்கு’ என்பதாகும்.

இந்த படத்தின் இயக்குனர் அனந்தசிவம் இந்த படத்தை பற்றி கூறும் போது இந்த கதையில் வசீகரன் கதாநாயகராக நடிக்கிறார் என்றும்.

அவருக்கு அம்மாவாக செந்தில் நடிக்கிறார் என்றும் கூறியுள்ளார் 

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நேகா அவர்கள் நடிக்க இருக்கிறார்.

நடிகை நேகா அவர்கள் இதற்கு முன் தண்ணியில் கண்டம், உச்சத்துல சிவா மற்றும் ஒண்டிக்கட்டை என்னும் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமுதவாணன், போஸ் வெங்கட் மற்றும் மீராகிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

கே.பாக்யராஜ் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாக்கிய  படமாகும்.