அம்மாடியோவ்.. ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவா!! பிக்பாஸில் கலந்துகொண்ட விஜே மகேஸ்வரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??

அம்மாடியோவ்.. ஒரு நாளைக்கு மட்டும் இவ்வளவா!! பிக்பாஸில் கலந்துகொண்ட விஜே மகேஸ்வரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா??



Vj maheshwari salary details viral

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நிகழ்ச்சி தொடங்கிய  இரண்டாவது வாரத்திலேயே ஜிபி முத்து சொந்த காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு சாந்தி மாஸ்டர் பின்னர் அசல் கோளார், ஷெரினா ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினர். 

இந்த நிலையில் கடந்த வாரம் அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா ஆகியோர் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் மகேஸ்வரி குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் வெளியேறிய போது அவர், இதற்காக நான் வருந்தவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவரை நான் நானாக இருந்தேன். கேமராவிற்காக நடிக்கவில்லை. அதுவே எனக்கு திருப்தியாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

bigboss

இந்த நிலையில் தற்போது மகேஸ்வரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  மகேஸ்வரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ஒரு நாளுக்கு 23 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், மொத்தமாக அவர் இருந்த 35 நாட்களுக்கும் சேர்த்து 8 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.