சினிமா

எப்படியெல்லாம் ஜாலியா இருந்த பொண்ணு.. இறப்பதற்கு முன் சித்ரா ஆடிய அழகிய நடனம்.. வைரலாகும் வீடியோ.

Summary:

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானானவர் நடிகை சித்ரா. முல்லை என்ற இவரது சீரியல் கதாபாத்திரம் இவரது இயற்பெயரையும் மறக்கவைத்து மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் இவரை பிரபலமாக்கியது.

இப்படி பேரும், புகழுடனும் இருந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

எப்போது பார்த்தாலும் ஆடல், பாடல், டப்மாஸ் வீடியோ, இன்ஸ்டாகிராமில் வண்ண வண்ண புகைப்படங்களை பதிவிடுவது என துடிப்பாக இருந்த சித்ரா இப்படி பாதியிலையே சென்றுவிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது முதல் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ என அழகாக நடனம் ஆடிய வீடியோ ஒன்றை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவை பார்த்த பலரும் மிஸ் யூ அக்கா.. என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.


Advertisement