சினிமா Bigg Boss

விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருக்கும் பிரபலம்! யார் தெரியுமா? ஆட்டம் இனிதான் சூடுபிடிக்க போகுது.

Summary:

பிக்பாஸ் வீட்டிற்குள் புது வரவாக தொகுப்பாளினி அர்ச்சனா விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புது வரவாக தொகுப்பாளினி அர்ச்சனா விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

16 பிரபலங்களுடன் கடந்த வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு மிகவும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இன்றுடன் 7 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் நான்கு, வழக்கம்போல் சண்டை, மோதல், வாக்குவாதம் என சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சித்தரும் விதமாக விரைவில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது பெயர் 16 போட்டியாளர்களில் ஒருவராக அடிபட்டநிலையில் ஒருசில காரணங்களால் இவரால் கலந்துகொள்ளமுடியவில்லை என கூறப்பட்டது.

ஆனால் தற்போது இவரது பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இவர் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement