இந்தியா சினிமா

மோடி இடத்தை பிடிக்கும் பிரபல நடிகர்! வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள் !

Summary:

vivek oparai act as modi in movie

சமீப காலமாக திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரது வாழ்க்கை வரலாறும்  சினிமாவாக உருவாகி வருகிறது. மேலும் அதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது . 

மேலும் பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் வெளிவர உள்ள இந்தப் படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கான தேர்வுகள் தீவிரமாக நடைபெற்றது. அதற்கு முன்னணி நடிகர்கள் பலரும் பரிசீலிக்கப்பட்டு நிலையில், இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடிக்க தேர்வு செய்யபட்டுள்ளார்.

    vivek oberai க்கான பட முடிவு

மேலும் இந்த படத்தை ஓமுங்குமார் இயக்கவுள்ளார், சந்தீப் சிங் தயாரிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து  இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 7ஆம் தேதி வெளிவர உள்ளதாக பிரபல திரைப்படத் துறை வல்லுநர் தருண் ஆதர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement