சினிமா

சூடுபிடித்த ஐஸ்வர்யா மீம்ஸ் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய்

Summary:

Vivek oberoi asks apologise in twitter

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நடிகர் விவேக் ஓபராய் பகிரந்த நடிகை ஐஸ்வர்யா ராய் இருந்த மீம்ஸ் ஒன்றை பகிரந்த விவகாரத்தில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். 

பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் (42) ஹைதராபாத்தில் பிறந்தவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 2003 ஆம் ஆண்டில் விவேக் ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக இருந்து வந்தார். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் சல்மான் கான் இவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையை சித்திரிக்கும் மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த மீம்ஸில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர்கள் மற்றும் தற்போதைய குடும்பத்தை பற்றி சித்தரிக்கப்பட்டு இருந்தது. 

வேறு ஒருவரால் உருவாக்கப்பட்ட அந்த மீம்ஸை விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துவிட்டதாக விவேக் ஓபராய் மீது பலர் கண்டனத்தை தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 


இதனைத் தொடர்ந்து இன்று விவேக் ஓபராய், தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2000 ஏழை பெண்களின் வாழ்க்கை மேம்பட நான் பாடுபட்டுள்ளேன். எந்த பெண்ணையும் அவமரியாதையாக நடத்த நான் நினைத்தது கூட இல்லை. 


அந்த மீம்ஸிற்கு நான் செய்த ரிப்ளை ஒரு பெண்ணையாவது காயப்படுத்தியிருந்தால் அதை நான் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள்; அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன்" என பதிவிட்டுள்ளார். 


Advertisement