உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பம்...! இதுதான் காரணமா.... வைரலாகும் வீடியோ இதோ...vivek-family-in-happy-momemts

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விவேக். இவரின் காமெடியில் எப்பொழுதும் ஒரு தனி சிறப்பு உண்டு. சிரிப்பு மட்டுமின்றி சிந்திக்கும் அளவிக்கும் இவரது  காமெடி இருக்கும். நடிகர்  விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 அண்மையில் விவேக் அவர்களின் மனைவி அருள்செல்வி முதல்வரை நேரில் சந்தித்து விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு விவேக் அவர்களின் பெயரில் தெரு பெயரை திறந்துள்ளனர். அதற்கான நிகழ்ச்சி மே 3 ஆம் தேதி நடக்க விவேக் அவர்களின் மனைவி, மகள்கள் கலந்துகொண்டு பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி...