சினிமா

அடேங்கப்பா! விஸ்வாசம் இதுவரை இத்தனை கோடி வசூலா? முழு ரிப்போர்ட் இதோ!

Summary:

Viswasam total collection details

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் கூட்டணி சேர்ந்தனர் சிவா மற்றும் அஜித். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.

இதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் விஸ்வாசம் படம்தான். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது  என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில்

தமிழகம்- ரூ 130 கோடி
கர்நாடகா- ரூ 10.5 கோடி
கேரளா- ரூ 2.9 கோடி
வெளிநாடுகள்- ரூ 42 கோடி

இதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ 185 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.


Advertisement