சினிமா

என்னது.. நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா! இப்போ எதில் நடிக்கிறார் தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிக

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து அவர் நீர்பறவை, குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  மேலும் அவர் இறுதியாக காடன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜகஜால கில்லாடி, எப்ஐஆர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு ஆரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.


நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி ரஜினி பிரபல நடிகர் கே.என் நட்ராஜின் மகள் ஆவார். இவர் ரஜினியின் நெருங்கிய நண்பராம். நடிகராக இருந்த நட்ராஜ் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். மேலும் சின்னத்திரையில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ள அவர் தற்போது ரோஜா மற்றும் வேலைக்காரன் ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Advertisement