விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? அசத்தல் அப்டேட்!Vishal in thupparivalan 2 movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை எடுக்கும்போது இயக்குனர் மிஷினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மிஷ்கின் திடீரென விலகினார்.

Thupparivalan 2

இதனையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷாலே இயக்குனர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த திரைப்படம் அடுத்த கட்டம் நகரவேயில்லை. இதனிடையே கடந்த 2022 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என விஷால் அறிவித்திருந்தார்.

ஆனால், அப்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Thupparivalan 2

அதனை உறுதிப்படுத்தும் வகையில் துப்பறிவாளன் 2 படத்தில் போஸ்டர் ஒன்றை காமிக்ஸ் வடிவில் நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி விரைவில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.