சீண்டி விட்ட தளபதி..! சீறிப்பாய காத்திருக்கும் புரட்சி தளபதி.?!



Vishal follows Vijay

தளபதி விஜய் சில தினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். 

அந்த நிகழ்ச்சி தான் இப்பொது வரை சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர், "விஜய் அரசியலுக்கு வரப்போகிறார், இதனால் தான் இந்த விளம்பரம் எல்லாம்" என்று முணுமுணுக்கிறார்கள்.

ஆனால், வழக்கம் போல் தளபதி விஜயின் ரசிகர்கள் நீ "வா தலைவா வா தலைவா" என்றே கொண்டாடி வருகிறார்கள். 

இதனை தொடர்ந்து தற்போது புரட்சி தளபதி விஷால், விஜய் நடத்திய நிகழ்ச்சி போலவே தானும் நடத்த இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள், ' புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையா இருக்கு' என்று காது கடித்து சொல்கிறார்களாம்.