"நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல" டபுள் மீனிங் பாடலால் சர்ச்சையில் சிக்கிய விஷால்..



Vishal double meaning song controversy

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார் விஷால்.

vishal

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன. இதனால் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விஷால் தற்பொழுது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமான 'மார்க் ஆண்டனி' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

vishal

சமீபத்தில் வெளியான இப்பாடலில் பஜாரி மூடு வரல, நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல, மூட கெடுத்த மூதேவி போன்ற பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இணையவாசிகள் விஷாலை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.