
விமல் மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் கன்னிராசி திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் கன்னிராசி திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் கன்னிராசி.இந்த படத்தில் நடிகர் விமல் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கான விநியோகஸ்த உரிமையை, மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் மீடியா டைம்ஸ் நிறுவனம் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளது. அதில், கன்னிராசி படத்தின் உரிமையை வாங்கும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை வெளியிடவில்லை, மேலும் வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே தங்களிடம் பெறப்பட்ட ரூ.17 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 8 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதுவரை இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னிராசி படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக , கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமின் இப்ராஹிம் வரும் டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement