எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன்.! பிரபல நடிகரை கிண்டல் செய்த ஜெயம் ரவி! போட்டுடைத்த விக்ரம்!!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானவர் ஜெயம் ரவி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் பிரபலங்கள் பங்கேற்ற பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி முன்னணி ஹீரோவை கிண்டல் செய்ததாக விக்ரம் போட்டுடைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஜெயம் ரவி என்னிடம் வந்து ஒரு ஹீரோவை பற்றி பேசினார். அந்த ஹீரோ அம்மா செத்தாலும் ஒரே எக்ஸ்பிரஷன், பூ கொடுத்து லவ் சொன்னாலும் அதே எக்ஸ்பிரஷன், ஊரை விட்டு ஓடினாலும் அதே எக்ஸ்பிரஷன்தான் கொடுக்கிறார் எனக் கூறினார். நான் அந்த ஹீரோ எனது நண்பன் என கூறியும் ஜெயம் ரவி தொடர்ந்து அந்த ஹீரோவை கிண்டல் செய்து பேசினார் என கூறியுள்ளார். இந்த நிலையில் ஜெயம் ரவி சொன்ன அந்த ஹீரோ யார்? என ரசிகர்கள் ஆராய துவங்கியுள்ளனர்.