மகான் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்! செம அப்செட்டில் விக்ரம் ரசிகர்கள்! ஏன் தெரியுமா??

மகான் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்! செம அப்செட்டில் விக்ரம் ரசிகர்கள்! ஏன் தெரியுமா??


vikram-mahan-release-in-ott

தமிழில் ஏராளமான மாஸ் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி கடினமாக உழைக்கக்கூடியவர். அடுத்ததாக விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். மேலும் வாணி போஜன் ,சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் பின்னணி வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

vikram

இந்நிலையில் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாக்கியுள்ளது. அதாவது 'மகான்’ திரைப்படம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் ஓடிடியில்  வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மகான் திரைப்படம் 
திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.