சினிமா

நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிக்க இருக்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

Summary:

Vikram irfan pathan

இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஆனால் இந்த இன்னும் பெயர் வைக்கவில்லை. மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் என்னவெனில் இந்த படத்தில் சியான் விக்ரமுடன் இந்திய கிரிக்கெட் அணியின் அல்ரவுண்டர் இர்பான் பதான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இர்பான். மேலும் அதில் அவர் எனது அன்பான புள்ளைங்கோ அனைவருக்கும் வணக்கம் என்றும், நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.


Advertisement