சினிமா

உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் சின்னத்தம்பி ப்ரஜன்! இதான் காரணமா?

Summary:

Vijay tv prajan wife sandra gave birth to twin babies

பல வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் ப்ரஜன். இந்த தொடர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்த தொடருக்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார் நடிகர் ப்ரஜன்.

ஒருசில பட வாய்ப்புகள் கிடைத்தும் இவரால் பெரிய அளவில் சினிமாவில் பிரபலமாக முடியவில்லை. தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்த ப்ரஜன் சின்னத்தம்பி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ப்ரஜன் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக உள்ளதாக நடிகர் ப்ரஜன் சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 10 வருடம் கழித்து தன் மனைவி குழந்தைபெற போவதை தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார் நடிகர் ப்ரஜன்.

தற்போது 10 வருடம் காத்திருந்த இவர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை அல்லி கொடுப்பது போல்,  இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement