சினிமா

சூர்யாவுக்கு நடிக்க தெரியாதுன்னு யாரோ சொன்னது உண்மைதான்.. விஜய் டிவி மிமிக்ரி கலைஞர் போட்ட நச் பதிவு

Summary:

நடிகர் சூர்யா நாட்டில் வெளியாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளநிலையில் நடிகர் சூர்யா பற்றி பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.

நடிகர் சூர்யா நாட்டில் வெளியாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளநிலையில் நடிகர் சூர்யா பற்றி பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட  பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது சூரரைப்போற்று திரைப்படம். படம் வெளியான நாளில் இருந்து பலரும் நடிகர் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் நடிப்பு, கதை ஒருபுறம் இருந்தாலும் இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜிவி பிரகாஷின் இசை படத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அப்துல் கலாம் ஐயா கதாபாத்திரத்தில் வரும் நடிகருக்கு பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் டப்பிங் பேசியுள்ளார். தனது அனுபவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள நவீன், "அப்துல் கலாம் ஐயாவுக்கு டப்பிங் பேசி இப்படத்தில் ஒரு சிறு பகுதியாக பணிபுரிய வாய்ப்பு கொடுத்த சூர்யாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு நடிக்க தெரியாதுன்னு யாரோ சொன்னாங்க. அது உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியல.. கதாபாத்திரமாவே வாழ்ந்து காட்டிட்டீங்க சார் எனவும், படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்" எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement