சினிமா

விஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு! குழப்பத்தில் ரசிகர்கள்! என்னாச்சு தெரியுமா?

Summary:

Vijay tv kalyaanamam kalyanam renamed as anjali

மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைகாட்சி. புது புது நிகழ்ச்சிகள், புது புது சீரியல் என மக்களை தன் பக்கம் வைத்துள்ளது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாலும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.

அதுபோன்ற சீரியல்களில் ஒன்றுதான் கல்யாணமாம் கல்யாணம். கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும், ஆடம்பரகமாக வாழ்ந்த பையனுக்கும் ஏற்படும் காதல், அவர்களது கல்யாணம், கல்யாணத்திற்கு பிறகு அவர்களது சொந்த பந்தங்களால் அந்த பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகள் இவற்றை மையமாக கொண்ட கதை.

கதையில் நாயகனாக தேஜஸ் கவ்டா என்பவர் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், நாயகியாக ஸ்ரீது நாயர் கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். விறுவிறுப்பாக  சென்றுகொண்டிருந்த நிலையில் நாடகத்தில் இருந்து கதாநாயகன், கதாநாயகி இருவரும்  அதிரடியாக மாற்றப்பட்டனர். இவர்களுக்கு பதில் இரண்டு புதிய முகங்கள் அறிமுகமாகினர்.

இந்நிலையில் கதைப்படி நாயகிக்கு குழந்தை பிறக்க, தற்போது நாடகத்தின் பெயரையே மாற்றியுள்ளது விஜய் டிவி. குழந்தைகள் பிறந்தபிறகு அவர்களை மையமாகக் கொண்டு கதை நகர்வதுபோல் ப்ரோமோ ஒளிபரப்பாவதுடன் கல்யாணமாம் கல்யாணம் என்ற பெயரை மாற்றி "அஞ்சலி" என்று பெயர் வைத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.


Advertisement