சினிமா

சூடான டீயை என் மூஞ்சில ஊத்திருக்காங்க.! நம் எல்லோரையும் சிரிக்கவைக்கும் பாலா வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா.?

Summary:

Vijay Tv Fame Bala Sad moments video goes viral on Internet

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலா தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ள வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கையில் வெற்றி என்பது பெரும்பாலானவர்க்ளுக்கு எளிதில் கிடைத்து விடக்கூடிய ஒன்றல்ல. இன்று வெற்றி பெற்று புகழின் உச்சத்தில் இருக்கும் பெரும்பாலானோர் அந்த வெற்றியை பெறுவதற்காக தொடக்கத்தில் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் அதிகம் என்றே கூறலாம்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலா அதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

குக் வித் கோமாளி தொடரில் இவர் செய்த காமெடிகள் வேறு ரகம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக எடுத்துச் சென்றார் பாலா.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியள்ள பாலா தான் இந்த இடத்துக்கு வருவதற்காக பட்ட சிரமம் மற்றும் கஷ்டம் குறித்து பேசியுள்ளார். இந்த இடத்துக்கு நான் சாதாரணமாக வந்து விடவில்லை எனவும் மேடையில் பர்பாமன்ஸ் செய்யும் போது சூடான டீயை எடுத்து கூட தன் மீது ஊற்றியுள்ளார்கள் எனவும் பாலா கூறியுள்ளார்.

கண் கலங்கிய முகத்துடன் பாலா கூறியதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் அழுதுவிட்டனர். நம் எல்லோரையும் சிரிக்க வைக்கும் பாலா தொடக்ககாலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தவரா என்ற ஆச்சரியத்துடன் ரசிகர்கள் அதா வீடியோ காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement