சினிமா

என்னா ஒரு மாற்றம்! அச்சு அசல் தனுஷ் போலவே மாறிய விஜய் டிவி தீனா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

விஜய் தொலைக்காட்சி புகழ் நடிகர் தீனா திடீரென நடிகர் தனுஷ் போல் வேடமணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சி புகழ் நடிகர் தீனா திடீரென நடிகர் தனுஷ் போல் வேடமணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி தீனா. அதிலும் இவர் போன் செய்து கலாய்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தனம் போன்று தற்போது தீனாவும் தனது திறமையால் விஜய் தொலைக்காட்சி மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தனுஷ் இயக்கி நடித்த பவர் பாண்டி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் தும்பா படம் மூலம் மேலும் பிரபலமானார். அதனை அடுத்து கார்த்தியின் கைதி திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாக்கியது. தற்போது தளபதியின் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தீனா.

இப்படி சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் இவர், நடிகர் தனுஷ் நடித்து மெகாஹிட் ஆன ஆடுகளம் கருப்பு, அசுரன் சிவசாமி போன்ற கெட்டப்புகளில் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகவிரும்நிலையில், புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஏற்கனவே நீங்கள் தனுஷ் போன்றுதான் இருப்பீர்கள். இப்போ அச்சு அசல் அவராகவே மாறிவிட்டிர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement