சினிமா

இதுதான் சார் விஜய் டிவி பாலாவின் உண்மையான குணம்!! வீடியோ பார்த்துவிட்டு புகழும் நெட்டிசன்கள்..

Summary:

விஜய் டிவி புகழ் பாலாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுவர

விஜய் டிவி புகழ் பாலாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுவருகிறது.

சிவகார்த்திகேயன், சந்தானம், குக் வித் கோமாளி புகழ், தீனா இதுபோன்ற சினிமா பின்னணி இல்லாத பலர் இன்று தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்க முக்கிய காரணங்களில் ஒன்று விஜய் டிவி. திறமையான நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஒரு மேடையை உருவாக்கி இன்று அவர்களை வாழவைத்து வருகிறது விஜய் டிவி.

இப்படி விஜய் டிவி மூலம் உருவான பல்வேறு கலைஞர்களில் ஒருவர்தான் கலக்கப்போவது யாரு புகழ் பாலா. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலா, பல்வேறு கேலி பேச்சுக்கள், கஷ்டங்கள் இவற்றையெல்லாம் தாண்டி இன்று புகழின் உச்சத்தில் உள்ளார்.

குறிப்பாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மனதில் நிறத்தமான இடத்தை சம்பாதித்து தந்துள்ளது. இந்நிலையில் தெருவோரும் இருக்கும் பாட்டி ஒருவருக்கு, பாலா சாப்பாடு வாங்கி கொடுப்பதும், பதிலுக்கு அந்த பாட்டி பாலாவுக்கு ஆசிர்வாதம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும், கஷ்டப்பட்டு வளர்ந்த ஒருவருக்குத்தான் மற்றவர்களின் கஷ்டம் என்ன என்று புரியும் என பாலாவை புகழ்ந்துவருகின்றனர்.


Advertisement