சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் நடிகையின் கருவிலேயே இறந்த 9 மாத குழந்தை; அரங்கமே கண்ணீரில் மூழ்கியது; வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

Summary:

vijay tv - big boss - actress rashma sad incident

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த மூன்றாவது சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனால் மூன்றாவது சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ரேஷ்மா. சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர். இவர் மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது.  

இந்நிலையில், இன்றைக்கு வெளியான புரோமோவில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நடந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ள போட்டி நடக்கிறது. அதில் தான் ரேஷ்மா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியுட்டுள்ளார். அதாவது, ரேஷ்மாவுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது.  

அது மட்டுமல்லாமல் 9 மாதம் அவர் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இறந்துள்ளது. இதுவரை வெளியே தெரியாத இந்த விஷயத்தை ரேஷ்மா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார். இது எல்லோரிடம் அதிர்ச்சியை உண்டாக்கி பிக்பாஸ் அரங்கமே கண்ணீரில் மூழ்கியது.

தற்போது புரோமோவாக இது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று இரவு ரேஷ்மாவின் வாழ்க்கை நடந்த சோகம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி கண்ணீரை நிச்சயம் வரவழைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.


Advertisement