சினிமா

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் அதே ஹீரோயின்..! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

Vijay to pair with this heroine again in sequel?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியவது தாமதமாகியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் AR முருகதாஸுடன் கூட்டணி சேர இருப்பதாகவும், துப்பாக்கி 2 படம் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே ஊரடங்கு காரணமாக விஜயின் அடுத்த படம் குறித்த அறிவுப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில் துப்பாக்கி முதல் பாகத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை ஒன்றிணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி 2 வரப்போகிறது என்பதை உறுதி செய்துவிட்டனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி 2 படத்தில் நாயகி யார் எனவும் செய்திகள் வெளியாகிவருகிறது. துப்பாக்கி முதல் பாகத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால்தான் துப்பாக்கி 2 படத்திலும் நாயகி என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூவரவ தகவல்கள் இதுவரை வெளியாகாதநிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement