சினிமா

நடிகை வனிதாவின் மகனா இது! கார்த்தியின் இந்த படத்தில் நடித்திருக்கிறாரா? தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

Vijay srihari acted in karthi saguni movie as child artist

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து வனிதா ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில்  பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.  மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

நடிகை வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. இவர் சிறு வயதிலேயே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தனது தாயை விட்டு பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் விஜய் ஸ்ரீஹரி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சகுனி படத்தில் கார்த்தியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement