சினிமா

பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஜய்யின் ஹிட் பாடல் ! கொண்டாட்டத்தில் மாணவர்கள்.!

Summary:

vijay song in school text book

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது மாபெரும் முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் இவரது பெயரில்  ரசிகர் மன்றங்கள், மக்கள் இயக்கங்கள் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ரசிகர்கள் மக்கள்நல தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி விஜய்யின் அனைத்து செயலையும் சமூக வலைதளங்களின் மூலம் பரப்பி வருகின்றனர்.

vijay க்கான பட முடிவு

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடல் பள்ளி பாட நூலில் இடம் பெற்றுள்ளது என புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர் ரகுமான் இசையில், வாலி எழுதிய இப்பாடல் இசையுடன் இயங்குவோம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Vijay Song in school syllabus, நடிகர் விஜய்

இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Advertisement