பாலிவுட்டில் செம பிஸியான விஜய் சேதுபதி.! அடேங்கப்பா.. தலைவரோட எந்த டாப் நாயகி இருக்காங்கனு பார்த்தீங்களா!!vijay sethupathi with katrina kaif photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக  வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த அவர் குறுகிய காலத்திலேயே தீராத முயற்சியால் முன்னேறியுள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது.

விஜய் சேதுபதி தமிழ்  மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். அதுமட்டுமின்றி ஹீரோவாக நடித்து வந்த அவர் தற்போது பல டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். சமீபத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

vijay sethupathi

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன்  இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் டாப் ஸ்டாரான கத்ரினா கைப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay sethupathi