சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விஜய் சேதுபதி எப்படி இருந்துள்ளார் பாருங்க!! வைரல் புகைப்படம்..
நடிகர் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக, மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து, இந்தியளவில் கவனம் பெற்றுவருகிறார். சினிமாவில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கிவருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இவரின் பவானி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் சேதுபதி அப்போதில் இருந்தே செம அழகுதான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.