வில்லனிலிருந்து அப்பாவாகும் விஜய் சேதுபதி! அதுவும் எந்த நடிகருக்கு பார்த்தீர்களா! வேற லெவல்தான்!

வில்லனிலிருந்து அப்பாவாகும் விஜய் சேதுபதி! அதுவும் எந்த நடிகருக்கு பார்த்தீர்களா! வேற லெவல்தான்!


vijay-sethupathi-going-to-act-as-father-to-soori

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  குறுகிய காலத்திலேயே தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்ற விஜய் சேதுபதிக்கென தற்போது தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

அவரது கைவசம் தற்போது  கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) என ஏராளமான படங்கள் உள்ளன. 

vijay sethupathi

ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி பின் வில்லனாக அவதாரம் எடுத்து ரஜினியின் பேட்ட மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றில் சூரிக்கு அப்பாவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.