ஓடிடியில் வெளியாகிறது க/பெ. ரணசிங்கம்! அதுவும் எப்போ தெரியுமா? விஜய் சேதுபதி வெளியிட்ட அறிவிப்பு!vijay-sethupathi-announcement-about-kape-ranasingam-mov

 கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.  இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் படம் ஜிபிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் உருவாகவிருக்கும்  க/பெ ரணசிங்கம்  திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.