#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா! ஷாக்கான ரசிகர்கள்.
நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் தற்போது விஜய் வெளிநாட்டில் இருப்பதால் அவர் இந்தியா வந்தவுடன் ஷுட்டிங்கை துவங்கவுள்ளனர்.
மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி தேர்வு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு 10 கோடி சம்பளம் பெறுகிறாராம். அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது.