தளபதியின் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆசை! பிரபல நடிகர் சல்மான் கான் ஓபன் டாக்!Vijay salman kan

நடிகர் சல்மான் கான் பிரபலமான பாலிவுட் நடிகர். இவர் 1988 ஆம் ஆண்டு வெளியான பீவி ஹோ தோ ஐசி என்ற இந்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 70 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது இந்தி பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதை சமயத்தில் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் தபாங் 3 படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படம் இந்தியில் ரீமேக்கானது. அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.

vijay

இந்நிலையில் தற்போது நடைப்பெற்ற தபாங் 3 படத்தின் பிரஸ் மீட்டில் விஜயின் தெறி மற்றும் திருப்பாச்சி படத்தை ரீமேக் செய்ய ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.