அந்த விஷயத்தில் ரஜினிக்கு அடுத்த விஜய் தான்.. வெளியான பரபரப்பு தகவல்.!Vijay salary increased after leo movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

Leo

90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஜய். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வரும் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ' லியோ ' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'லியோ' படபிடிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.

Leo

இது போன்ற நிலையில், 'லியோ' படத்தில் இளைய தளபதி விஜய் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்து இவர்தான் அதிகம் சம்பளம் பெறும் நடிகர் என்று வெள்ளித்திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.