சினிமா

எனக்கே சவாலா..? மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து காட்டிய விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!

எனக்கே சவாலா என்பதுபோல் தெலுங்கு  சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து முடித்துள்ளார் நடிகர் விஜய்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கு மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரும் கூட. இவர் சமீபத்தில் தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளை முன்னிட்டு #GreenIndiaChallenge என்ற சவாலை நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்திருந்தார்.

 சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மரம் நடும் வீடியோ ஒன்றுடன், “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன் என மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் அல்லது வீடியோவாக வெளியிட்டு, அந்த சவாலை மேலும் மூவருக்கு பரிந்துரை செய்யவேண்டும். அந்த வகையில் மகேஷ் பாபு இந்த சவாலை நடிகர் விஜய்க்கு தெரிவித்ததை அடுத்து நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

 தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு,  ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அந்த பதிவில் மகேஷ் பாபுவின் டிவிட்டர் பக்கத்தை குறிப்பிட்டுள்ள விஜய், இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.  விஜய்யின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகிவருகிறது.

 இதையடுத்து நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.


Advertisement