சாதனை படைக்க தயாராகும் விஜய்யின் லியோ திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!Vijay in leo movie release English in Netflix

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.

vijay

மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், மடோனா செபஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, அனுராக் காஷ்யப், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றநிலையில், தற்போது ஓடிடியிலும் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

vijay

இந்த நிலையில் வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் லியோ திரைப்படம் ஆங்கிலத்திலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் படம் ஒன்று முதல் முறையாக ஆங்கிலத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.