கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்...! வெளியானது தளபதி விஜய்யின் அரபிக் குத்து பாடல்! வைரலாகும் வீடியோ இதோ...



Vijay in beast song release

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். 

மேலும் அவர்களுடன் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஒன்றாக இருக்கும் அரபிக்குத்து பாடலின் கலகலப்பான ப்ரமோ அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. தற்போது இந்த  பாடல் இணையத்தில் செம  வைரலாகி  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.