சினிமா

விஜய்யின் அடுத்த படத்தில் இது நடக்கப்போவது உண்மையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Summary:

VIjay first timing acting without heroine in next movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். தெரி, மெர்சல் என இவர்கள் கூட்டணியில் உருவான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தளபதி 63 படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இளம் இயக்குனர்  லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பல செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது. லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் கார்த்தியுடன் கைதி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

தற்போது வெளிவந்த தகவலின் படி, ஒருவேளை விஜய் மற்றும் லோகேஷ் அடுத்த படத்தில் இணைந்தால் அந்த படம் சூப்பர் ஹீரோ அல்லது கேங்ஸ்டர் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது, மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அப்படி இது கேங்ஸ்டர் கதையாக இருந்தால் விஜய்க்கு படத்தில் ஜோடியே இல்லையாம்.

தன் இத்தனை வருட திரைப்பயணத்தில் விஜய் முதன் முறையாக ஹீரோயின் இல்லாமல் நடிக்கப்போவதாக ஒரு சில செய்திகள் வெளியாகி வருகின்றது.


Advertisement