சினிமா வீடியோ

மேடையில் பேசிக்கொண்டிருந்த விஜய்யை கீழே தள்ளிய ரசிகர்.! இதுதான் காரணமா? வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

vijay devara konda fall on stage

அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. 

மேலும் இப்படத்தில் ஸ்ருதி ராமசந்திரன், ராவ் ரமேஷ், அனிஷா குருவில்லா, ரகு பாபு, சுகன்யா, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில், இடம்பெற்றுள்ள காம்ரேட் ஆந்தம் பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

dear kamred க்கான பட முடிவு

இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு ரசிகர்கள் முன்பே பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் ஓடிவந்து விஜய் தேவரகொண்டாவில் கால்களை பிடித்துக்கொண்டுள்ளார். அப்பொழுது விஜய் தேவரகொண்டா தடுமாறி  மேடையிலேயே கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து மேலே எழுந்த விஜய் தேவரகொண்டா கோபம் அடையாமல், ரசிகரிடம் நீங்கள் என்னை தாக்குகிறீர்களா இல்லை பாசம் காட்டுகிறீர்களா என்று கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

பின்னர் அங்கிருந்தவர்கள் விஜயை தூக்கிவிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் பேசிய விஜய் தேவரகொண்டா சற்றும் கோபம் அடையாமல், நீங்கள் என்னை தாக்குகிறீர்களா இல்லை பாசம் காட்டுகிறீர்களா என்று சிரித்துக்கொண்டே கேட்டுள்ளார்.


Advertisement