கொரோனா அச்சுறுத்தலிலும், நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தியேட்டர்கள் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திரையுலகில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் வருமானம் இழந்து பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் சில தளர்வுகளுடன் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர்கள் பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயங்குகின்றனர்.
என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும்,
— vijayantony (@vijayantony) September 3, 2020
என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்.
நம்பிக்கையுடன்
நான் 😊🎥🎬
இந்நிலையில் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.