பிச்சைக்காரன் 2... புதிய அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி! அட்டகாசமான போஸ்டருடன் அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்!

பிச்சைக்காரன் 2... புதிய அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி! அட்டகாசமான போஸ்டருடன் அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்!


vijay-anthony-became-a-director-to-pichaikaran-2-movie

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படம் பெருமளவில் ஹிட்டாகி வசூல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.  பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி வேறு பட வேலைகளில் பிசியாக இருந்த நிலையில் இப்படத்தை பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. ஒரு சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகிய நிலையில், மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் பரவியது.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ்  பிச்சைக்காரன் 2 படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அவர், விஜய் ஆண்டனிதான் இந்த படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக, நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்க உள்ளார்.