கதை சூப்பர்..! மீண்டும் இணையும் விஜய் - அட்லீ கூட்டணி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கதை சூப்பர்..! மீண்டும் இணையும் விஜய் - அட்லீ கூட்டணி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!


Vijay and Atlee team up again after Thalapathi 66

இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் இருவரும் மீண்டும் கூட்டணி சேர இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது நான்காவது முறையாக மீண்டும் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கு சமயத்தில் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் நடிகர் விஜய்யிடம் இயக்குனர் அட்லீ சிறிய கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போக அந்த கதையை முழு ஸ்கிரிப்டாக ரெடி பண்ணுமாறு விஜய் அட்லீயிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

vijay

விஜய் அடுத்ததாக இயக்குனர் முருகதாசுடன் தனது 65 வது படத்திலும், இயக்குனர் வெற்றிமாறனுடன் தனது 66 வது படத்திலும் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஊரடங்கு உத்தரவுக்கு பின் அட்லீ தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குவார் எனவும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானிடமும் அட்லீ கதை சொல்லி இருப்பதாகவும், அந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளன்று வெளியாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.