நடிகர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை.! மகிழ்ச்சியில் ரசிகர்கள், தொண்டர்கள்!!Vijakanth discharged from hospital

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி சளி, காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பல வதந்திகள் பரவி வந்தது. தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கேப்டன் நலமாக உள்ளார். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்பாதீர் என வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் விஜயகாந்த்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.