நயன்தாராவின் நாயகனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

நயன்தாராவின் நாயகனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?


vignesh-sivan-wish-for-oscar-award

தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் விக்னேஷ் சிவன். மேலும் இவர் போடா போடி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது பாடல் வரிகளையும் எழுதி வருகிறார்.

விக்னேஸ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ஆஸ்கர் கனவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டது.

vignesh sivan

இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் அரங்கிற்குள் செல்லும் கதவின் அருகே நின்றபடி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும்  உடன் எனக்கும் ஒரு நாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை என்று பதிவிட்டிருந்தார்.

 மேலும் ஆஸ்கர் கலைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது கனவு நினைவாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட் படம் எடுங்கள் அப்பொழுதான் உங்களது ஆசை நிறைவேறும் எனவும் அறிவுரை கூறியுள்ளனர்.