சினிமா

வேட்டையாடு விளையாடு 2..! மீண்டும் கவுதம் மேனனுடன் இணைகிறாரா கமல்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

Vettaiyadu Vilayadu 2 kamal joins again with Gautham Menon

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், கமல் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார் கமல். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு இடத்தில் நடந்த விபத்து மற்றும் மரணம் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியன் முதல் பாகம் ஊழலை மையமாக கொண்ட படம் என்பதாலும், கமல் தற்போது அரசியல் களத்தில் உள்ளதால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு பிறகு, கடந்த 2006 ஆம் ஆண்டு, கவுதம் மேனன் இயக்கத்தில், கமல் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகத்தில் கமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement