சினிமா

காமெடி நடிகர் அப்பு குட்டி வாழ்வில் நடந்த சோகம்! அவருக்கு இப்படி ஒரு கஷ்டமா?

Summary:

Veeram movie appu kutti current status

அழகர் சாமியின் குதிரை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் அப்புக்குட்டி. அந்த படம் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாகியது. அதனை அடுத்து ஒருசில படங்களில் நடித்த இவர் சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்தில் தல அஜித்துடன் இணைந்து சிறு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

தல அஜித்துடன் நட்புறவில் இருந்த இவரை வைத்து தல அஜித் போட்டோ ஷூட் நடத்தி மேலும் பிரபலமாக்கினார். இந்நிலையில் வாழ்க விவசாயி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ள அப்புக்குட்டி தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறும் போது எனது அம்மாவை நேரில் பார்த்ததுபோல் இருந்தது என்றும் எனக்கு ஊரில் விவசாய நிலம் கிடையாது, எனது பெற்றோர் விவசாய கூலி என்றும், நிலம் இருந்திருந்தால் விவசாயம் செய்தோ அல்லது ஆடு மாடு மேய்த்தோ வாழ்ந்திருப்பேன்.

எனக்கு ஒருவேளை சோறு போடக்கூட எனது அம்மாவால் முடியவில்லை. நாம் ஏன் இன்னும் கஷ்டப்பட வேண்டும்? சென்னைக்கு சென்று வேலை தேடலாம் என்றுதான் சென்னைக்கு வந்தேன் என கூறினார்.

விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த கதையை ஓகே சொன்னேன் என்றும், என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? என்னை ஏற்றுக்கொள்ளக்கூடாதா? என மேடையில் பேசியது மனதை மிகவும் வலிக்கச்செய்துள்ளது.


Advertisement